காலம் ஓடிக்கொண்டிருக்கட்டும்
நாமும் அதனோடு...
எட்டு வருடம் முன்
நினைக்க சந்தோசமாய்த்தானிருந்தது
அது
இன்று அதீதமாய்.,
காதலை கொட்டி வைக்க
தேடிய நேரம் அது
பூக்கூடையாய் நீ.,
அப்போது கொட்டி வைத்த
பூக்கள் இன்று
என்மேல் அர்ச்சனைக்காய்.,
சிறு,பெரும் சண்டைகள்,
உடைத்து ஒட்டும்
முரட்டு வைத்தியமாய் காதல்.,
ஊடல்
சில நிமிடம்
சில மணிகள்
சில நாட்கள்
சில வாரங்கள்
என எல்லா காலக்கணக்கிலும்
ஆனால் முடித்துவைப்பது என்னவோ
காதலான காமம்தான்.
காதல் இல்லையெனில்
காமம் இல்லையெனில்
குடும்பங்களில்லை
காதல் இல்லையெனில்
காமம் இல்லையெனில்
குழந்தைகளில்லை
காதல் இல்லையெனில்
காமம் இல்லையெனில்
நாமும் இல்லை
எனக்காய் நீயும்
நமக்காய் குழந்தையும்
குழந்தைக்காய் நாமும்
விட்டுக்கொடுத்தல்
வாழ்க்கையை அர்த்தமாக்கும்
நாம் வாழ்வே
நம் குழுந்தைக்கானது
அதற்காகவேணும்
வாழ்வோம்
வாழ்க்கையை
வாழ்ந்து பார்ப்போமே
வாழ்க்கையை
எல்லோர் வாழ்க்கையும்
முயற்ச்சிதானே
விண்டவர் கண்டிலர்
கண்டவர் விண்டிலர்
வாழ்க்கையையும்
ஏராளக்கனவுகளுடன்
நீயும்
நானும்
கண்டது பலித்ததா
உயிர் பிரியும் அந்தக்கடைசி
நொடியில் கண்ணில் தெரியும்
பல நேரங்களில் தேவதையாய் நீ
ராட்சசனாய் நான்
சில நேரங்களில் ராட்சசியாய் நீ
தேவனாய் நான்
எலியாய் நீ
பூனையாய் நான்
இப்படிப்பல நேரங்களை ஆக்கியிருந்தாலும்
வாழ்க்கை சில காயங்களையும்
அதற்காய் மருந்துகளையும் நமக்கு தந்திருக்கிறது.
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
சில,பல இழந்தும்
வாழ்க்கை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது
இந்த கவிதை போல
வாழ்க்கையில்
முடியும்,மனமும்
நிறம் மாறலாம்!
மாறும்.
அதுவரை
நாமே மாற்ற முயற்ச்சிப்போம்.
4 வகுத்தலும்:
வாழ்க்கையின் பாதியில்
மனம் மாறினால் பூரணம்
முடி மாறினால் மரணம்
எவ்ளோ பெரிய உண்மைய எவ்ளோ வேடிக்கையா சொல்லிருக்கிங்க :0
அருமையான கவிதையின் தொகுப்பு
pala nerangalil devathayai nee!
ratsasanai naan
sila nerangalilratsasiyai nee
devanai naan
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
சில,பல இழந்தும்
வாழ்க்கை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது
இந்த கவிதை போல
romba alaga solliruka da ella kavithaiyaum romba "alagu"
ஆமாம் தங்கம்,
வாழ்க்கையும்,உண்மையும் எப்போதுமே வேடிக்கையானதுதான்..
ஆமாம் ரம்யா,
அழகை ,அழகாய்த்தானே சொல்ல முடியும்.. :-)
Post a Comment