CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

என் தோழிக்கு சமர்ப்பனம்

  • கண் மூடிக் கனவில் இருந்தவனை கழுத்தில் தட்டி கண் திறந்த உனக்கு
  • கர்வக் குழியில் இருந்தவனை கை பிடித்து கரை தூக்கி விட்ட உனக்கு
  • என்னவள் போலஇடை தெரியாமல் உடை உடுத்தும் உனக்கு
  • வண்ண வண்ண மனங்கள் பார்த்த எனக்கு வெள்ளை மனம் காட்டிய உனக்கு
  • பாதையில் கிடக்கும் பன்னீர் பூக்களை என்போல் பாதம் படாமல் தாண்டிச்செல்லும் உனக்கு
  • வேலியில் கிடைக்கும் கோவ்வை பழத்தை கூட ஞானப்பழமாய் நினைத்து நான் தர மறுக்காமல் வாங்கிகொண்ட உனக்கு ........


ஐந்து விரல்களில்

ஐந்து விரல்களில்
ஆள் காட்டி விரலாயிருக்க வேண்டும்,
அடுத்தவர்களுக்கு
வழிகாட்ட,

ஐந்து விரல்களில்
சிறு விரலாயிருக்க வேண்டும்,
சிறிதானாலும்
உறுதியாய இருக்க...

ஐந்து விரல்களில்
கட்டை விரலைய் இருக்க வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை
என்றிருக்க....

ஐந்து விரல்களில்
மோதிர விரலாய் இருக்க வேண்டும்,
மதிப்புள்ளவனக இருக்க....

மூன்றாம் பிறை

மணித்துளிகள் கரைய
மாதங்கள் மறைய
வாரங்கள் விலக
நாட்கள் நகர
காத்திருந்தேன்
உன் முகம் பார்க்க,
வந்ததும் மறைந்து கொண்டாய்,
மூன்றாம் பிறை
உன் முகம் காட்டி
மறைகின்றாய்.......

சில்லறை காசைப் போல்

எங்கு போயிற்று
என்னுள் இருந்த
உன்னை பற்றிய எண்ணங்கள்,

இதோ !

பார்வை இல்லாதவன் முன்னிருக்கும்
சில்லறை காசைப் போல்
அகப்படாமல்
துலாவிக் கொண்டு இருக்கிறேன்.

நினைவுகள்

எங்கு போனது
எனக்குள்ளிருந்த உன் நினைவுகள்
.
.
.
.
.
மோய்ப்பன் தொலைத்த
ஆட்டுக்குட்டி போல்
தோளில் போட்டு கொண்டு
தொலைத்து விட்டதாய் நினைத்து விட்டேன்.

மூன்றாம் பிறை

இன்று உனை காண
நீ வரும் வழி நோக்கி
நான் விழி பூத்து நிற்க
அதோ மூன்றாம் பிறையாய் நீ.?

கவிதை கழிவுகள்....

நீ தந்த காதலுக்கு
நான் செய்யும் கைமாறு
கவிதைதான் ..!
சுகமான உன் காதலுக்கு
மோசமான என் கவிதை கழிவுகள்....

என் இதயத்தை.

அன்று உன்னிடத்தில்
நான் எதையும் தேடவில்லை!
இன்று
உன்னிடத்தில் என் தேடுகிறேன்
என் இதயத்தை.

காதல் என்பது........

காதல் என்பது

சாப்பிடும்போது பார்வையை எங்கோ அலையவிட்டு சாப்பாட்டில் விரலாய் அலையவிடுவது.

உடுத்த உடையை தேர்ந்தெடுக்க குழம்புவது

மொழி தெரியாத புத்தகத்தை வாங்குவது

எதுவும் பேசாமல் நிறைய உளறுவது.

குளிர்பான கடையில் சுடாய் ஒரு ஆப்பிள் ஜுஸ் கேட்பது

பெற்றோரிடம் வகை வகையாய் பொய் சொல்வது

கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் நடுவில் கொஞ்சமாய் உறங்குவது .

இரவில் தலையணையை அணைத்துக்கொண்டு அதனுடன் பேசுவது .

மணிகணக்கில் பேசுவது விஷயம் இல்லாமல் .

ஒரே ஒரு வரி வாழ்த்து எழுத பல நாள் செலவழித்து அகராதியை அலசுவது.

இத்தனை வருடம் இல்லாமல் பிறந்த நாளை புதியதாக கொண்டாடுவது.

முதல் காரியமாக போட்டோ வாங்கி வைத்துக்கொள்வது.

தனிமையில் இருக்கும் போது தானாகப் பேசி, சிரித்துக் கொள்வது.

காதல் என்பது தொட்டாலும் தொடர்வது விட்டாலும் தொடர்வது.

வார்த்தை வல்லூறூகள்

என் தாகத்திற்கு தண்ணீர்


தேடிக்கொண்டிருக்கிறேன்

தேடும் பொழுது

வார்த்தை வல்லூறூகள்

என்னைச்சுற்றி

ஏதோ ஒன்று

எனக்கு தண்ணீர் -இல்லை

வல்லூறூகளுக்கு நான்

முழுமையாய் திருப்பியதில்லை நீ

சிறு வயதில் என் உடமைகளை
முழுமையாய் திருப்பியதில்லை நீ
உன்னிடமிருந்து வரும்போது

என் முழு நீள பென்சில் திரும்பும்
பாதியாக,
உன்னிடமிருந்து வரும்போது

முழுமையான என் ரப்பர் துண்டுபட்டிருக்கும்
இரண்டு,மூன்றாய்
உன்னிடமிருந்து வரும்போது

எழுத வாங்கிய என் பேனா ஊனமுற்றிருக்கும்
உன்னிடமிருந்து வரும்போது

ஊட்டமாயிருக்கும் என் நோட்டுப்புத்தகம்
பக்கங்கள் பாதியாயிருக்கும்
உன்னிடமிருந்து வரும்போது

இப்பொழுது என் இதயமும்

இதுவரை என்னுடைமைகளை நீ
முழுமையாக திருப்பியதில்லை

மூன்றாம் பிறையாய்

மூன்றாம் பிறையாய்
முதுகின் பின்னிருந்து
உன் முகம்................


மூன்றாம் பிறையாய்
கதவின் பின்னிருந்து
உன் முகம்................

மூன்றாம் பிறையாய்
குடையுள்ளிருந்து
உன் முகம்................

என்ன சொல்கிறாய் ?

இருட்டில்
நீயா?
நானா?

உன்னைப்போல்

உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
தமிழ் இலக்கியத்தில் வாசகம் தேடி நான்
யாசகம் நடத்தி
கிடைத்தவை கொண்டு
எழுதி முடிக்க

எதிரில் நீ
உன்னோடு ஒரு ஒப்பீடு

வரிகளும் மறைந்து
வாசகமும் மறைந்து
என் ஏடு முழுவதும்

அதன்பின்
மீதமிருப்பது
வெள்ளை தாள்
வெற்று புத்தகம்

நீ

நீ
மட்டும் தான்
உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
முடியும்.

சட்டென்று ஞாபகப்படுத்தும் சில

என்றும் என்னுள்
உனைப்பற்றிய எண்ணங்கள்
தினமும் சட்டென்று ஞாபகப்படுத்தும் சில

தினமும் நீ வந்த வழி நான் நடக்கையில்

நீ வந்து செல்லும் பேருந்தும்

உன் வருகையை பதிவு செய்ய
நீ இட்ட உன் கையெழுத்தும்

அறைச்சுவற்றில் உன் ரசனைக்கு
நீ ஒட்டி வைத்த படமும்

நீயும் நானும் சேர்ந்து நடக்கையில்
பாதம்படாமல் இருவரும்
தாண்டிசெல்லும்
பன்னீர்புஷ்பமும்

நம் நட்பில் நீ ரசித்து சொன்ன
இன்னும் பலவும்

உனைப்பற்றிய எண்ணங்கள்
தினமும் சட்டென்று ஞாபகப்படுத்தும் சில

எனக்கென்று ஒருத்தி

வட்ட முகம்
நல்ல நிறம்
தோளுயரம்
கூர்மையான, நிறை புத்தி
தன் காலில் நிற்கும் தாரம்- என

என் கையில் ஓடும் வரி பார்த்து
வரைந்துவிட்டான்
எனக்கென்று ஒருத்தியை

உன்னை சுற்றி..........

படுக்கையில்
என் உடல்
இடம், வலமாய் புரள
என் எண்ணங்கள் மட்டும்
உன்னருகில்,
உன்னையும் உன்னை
சுற்றியும்.....