CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’

நான்

’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’

அவள்

’ச்சீ போடா முடியாது’

நான்

’இல்லடி என்னால முடியாது’

அவள்

’உன்ன தொடவிட்டா நீ சும்மா இருக்க மாட்டடா!’

நான்

’ம்கும்’

அவள்

”நீ வைரஸ்டா!!

தொட விட்டா தொட்ட இடம் போக

மற்ற இடம் முழுதும் பரவிடுவ!

தொட்ட இடம் மட்டுமில்ல,

மிச்ச இடமும் எச்சமில்லாமல் பரவிடுவ”

நான்

”இல்லையடி நீ விட்டுப்பாரேன்

நான் தொட்டுப்பார்கிறேன்

சுண்டு விரலாவது உன் மேல் படனும்டி”

அவள்

”உன் சுட்டு விரலே

சுட்டு விடுமடா என் உடலை”

” நோ”   நீ வாமனன்

மூன்று விரலில் என் முழு உடல் அளப்பாய்!

முடியாதுடா!

நான்

”நம்படி என்னை”

அவள்

”ம் உன்மேல் எனக்குண்டு நம்பிக்கை

எண்ணை எரியும்

நீ என்னை எரிப்பாய்”

”அதனால் தான்

தொட

விட

முடியாமல் தவிக்கிறேனடா!”

”சரி ஒரு ஒப்பந்தம் நமக்குள்”

நான்

”ம் சொல்லு”

அவள்

”கண்ட இடம் தொடக்கூடாது”

சரி

புன்னகையுடன் நான்

அவள்

”டேய் என்ன சிரிப்பு

சந்தேகமா இருக்கு என் தமிழ்.

என்ன சொன்னேன் ”

”கண்ட இடம் தொடக்கூடாது ”

பெரும் சிரிப்புடன் நான்

அவள்

“டேய் பொறுக்கி

சொல்லிவிட்டுச் சிரி

இல்லை

என்னை கொன்று விட்டுச் சிரி”

நான்

”நான் கண்ட இடம்

உன் இடையில் சிறு இடைவெளி,

உன் அகண்ட முதுகின் திறந்த இடம்,

உன் குவிந்த இதழ் சற்றுத்திறந்த வாய்,

உன் முட்டைக்கண்விழி,

உன் முழங்கை, உன் பாதம்

“இதுதானடி நான் கண்ட இடம்”

நீ சொன்னது.

கண்ட இடம் தொடக்கூடாது தானே

காலமும் காதலும்

காலம் ஓடிக்கொண்டிருக்கட்டும்

நாமும் அதனோடு...

எட்டு வருடம் முன்

நினைக்க சந்தோசமாய்த்தானிருந்தது

அது

இன்று அதீதமாய்.,

 

காதலை கொட்டி வைக்க

தேடிய நேரம் அது

பூக்கூடையாய் நீ.,

 

அப்போது கொட்டி வைத்த

பூக்கள் இன்று

என்மேல் அர்ச்சனைக்காய்.,

சிறு,பெரும் சண்டைகள்,

உடைத்து ஒட்டும்

முரட்டு வைத்தியமாய் காதல்.,

 

 

ஊடல்

சில நிமிடம் 25Lovers

சில மணிகள்

சில நாட்கள்

சில வாரங்கள்

என எல்லா காலக்கணக்கிலும்

ஆனால் முடித்துவைப்பது என்னவோ

காதலான காமம்தான்.

 

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

குடும்பங்களில்லை

 

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

குழந்தைகளில்லை

 

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

நாமும் இல்லை

 

family_silhouette_clip_artஉனக்காய் நானும்

எனக்காய் நீயும்

நமக்காய் குழந்தையும்

குழந்தைக்காய் நாமும்

 

விட்டுக்கொடுத்தல்

வாழ்க்கையை அர்த்தமாக்கும்

நாம் வாழ்வே

நம் குழுந்தைக்கானது

 

அதற்காகவேணும்

வாழ்வோம்

வாழ்க்கையை

வாழ்ந்து பார்ப்போமே

வாழ்க்கையை

 

எல்லோர் வாழ்க்கையும்

முயற்ச்சிதானே

விண்டவர் கண்டிலர்

கண்டவர் விண்டிலர்

 

வாழ்க்கையையும்

ஏராளக்கனவுகளுடன்

நீயும்

நானும்

 

கண்டது பலித்ததா

உயிர் பிரியும் அந்தக்கடைசி

நொடியில் கண்ணில் தெரியும்

 

பல நேரங்களில் தேவதையாய் நீ

ராட்சசனாய் நான்

சில நேரங்களில் ராட்சசியாய் நீ

தேவனாய் நான்

 

எலியாய் நீ

பூனையாய் நான்

இப்படிப்பல நேரங்களை ஆக்கியிருந்தாலும்

வாழ்க்கை சில காயங்களையும்

அதற்காய் மருந்துகளையும் நமக்கு தந்திருக்கிறது.

 

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

சில,பல இழந்தும்

வாழ்க்கை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது

இந்த கவிதை போல

 

வாழ்க்கையில்

முடியும்,மனமும்

நிறம் மாறலாம்!

மாறும்.

 

அதுவரை

நாமே மாற்ற முயற்ச்சிப்போம்.

 

வாழ்க்கையின் பாதியில்

மனம் மாறினால் பூரணம்

முடி மாறினால் மரணம்

பூரணத்திற்க்கு பிறகு

நம் வாழ்க்கை நமக்கில்லை

மரணத்திற்க்கு பிறகு நாமில்லை

.

..

...

.....

இன்னும் முடிக்கப்படாமல்

கவிதையும்

வாழ்க்கையும்

நட்பு ராட்சசி



இனிதாய்த்தானடி இருந்தது
நம் உறவு
நெஞ்சுக்குள் இருந்த நட்பை
பிரசவித்து பேர் வைத்த பின்
அது ஊனமானதேன்


உன் பலம் 
உன் பிடிவாதம்
உன் பலவீனமும் 
உன் பிடிவாதம்


முதன் முதலாய் 
நல்ல ஊழியக்காரியாய் 
எனக்கு அறிமுகம்

இரண்டாவதாய்
நேர்மை
நேரம் தவறாமையும்
காலம் பார்க்காமையும்

எனக்குள் இருக்கும் நேர்மையும்
காலந்தவறாமையும்
உனக்குள் இருக்க
நமக்குள் 
நட்பு
நடைபழக ஆரம்பித்தது

சிறு மண்டைக்குள்
அணுவாய் உன் ஞாபகங்கள்
எனை வியக்க வைத்த காலங்கள் அவை

என் உதவிக்காய்
உனைப்பரிந்துறைக்க வைத்தது
உன் 
கண்ணியம்

என் உடலசைவறிந்து 
உன் உணர்வுகள் 
செய்யும் வித்தை பார்த்ததுண்டு

அதன் பின் தான் 
உன் நிழல்கூட 
அசையும் அசைவு கண்டேன்
என நெகிழ்ந்திருக்க


இன்று 
அதே நட்பு தந்த உரிமையால்
உன் மேல் உரிமையாய் ஒரு சொல்
வீச
உன் பிடிவாதம் 
அதைப்பிடித்துக்கொண்டது

திருப்பிக்கொடு
இனி உன் நட்பு இழக்க நான் தாயாரில்லை


நீ
நினைப்பாய்
ஏனெனில் 
நீ 
தேவதைகளின் ராட்சசி

சிறிது காலம்தான் 
நம் நட்பு என்று
உன் நினைப்பும் 
சிறிது காலமே இருக்கட்டும்



திருப்பிக்கொடு
இனி உன் நட்பு இழக்க நான் தாயாரில்லை

இன்னும்....