நான்
’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’
அவள்
’ச்சீ போடா முடியாது’
நான்
’இல்லடி என்னால முடியாது’
அவள்
’உன்ன தொடவிட்டா நீ சும்மா இருக்க மாட்டடா!’
நான்
’ம்கும்’
அவள்
”நீ வைரஸ்டா!!
தொட விட்டா தொட்ட இடம் போக
மற்ற இடம் முழுதும் பரவிடுவ!
தொட்ட இடம் மட்டுமில்ல,
மிச்ச இடமும் எச்சமில்லாமல் பரவிடுவ”
நான்
”இல்லையடி நீ விட்டுப்பாரேன்
நான் தொட்டுப்பார்கிறேன்
சுண்டு விரலாவது உன் மேல் படனும்டி”
அவள்
”உன் சுட்டு விரலே
சுட்டு விடுமடா என் உடலை”
” நோ” நீ வாமனன்
மூன்று விரலில் என் முழு உடல் அளப்பாய்!
முடியாதுடா!
நான்
”நம்படி என்னை”
அவள்
”ம் உன்மேல் எனக்குண்டு நம்பிக்கை
எண்ணை எரியும்
நீ என்னை எரிப்பாய்”
”அதனால் தான்
தொட
விட
முடியாமல் தவிக்கிறேனடா!”
”சரி ஒரு ஒப்பந்தம் நமக்குள்”
நான்
”ம் சொல்லு”
அவள்
”கண்ட இடம் தொடக்கூடாது”
சரி
புன்னகையுடன் நான்
அவள்
”டேய் என்ன சிரிப்பு
சந்தேகமா இருக்கு என் தமிழ்.
என்ன சொன்னேன் ”
”கண்ட இடம் தொடக்கூடாது ”
பெரும் சிரிப்புடன் நான்
அவள்
“டேய் பொறுக்கி
சொல்லிவிட்டுச் சிரி
இல்லை
என்னை கொன்று விட்டுச் சிரி”
நான்
”நான் கண்ட இடம்
உன் இடையில் சிறு இடைவெளி,
உன் அகண்ட முதுகின் திறந்த இடம்,
உன் குவிந்த இதழ் சற்றுத்திறந்த வாய்,
உன் முட்டைக்கண்விழி,
உன் முழங்கை, உன் பாதம்
“இதுதானடி நான் கண்ட இடம்”
நீ சொன்னது.
கண்ட இடம் தொடக்கூடாது தானே”
5 வகுத்தலும்:
அடடா மாம்ஸ் நீங்க கவிதையெல்லாம் எழுதுவிங்களா ? அதுவும் இவ்ளோ அருமையா..............
ம்ம்ம்
ஆகா...அனுபவம் பேசுகிறது!
கர்ர்ர்ர்ர்ர்ர்
:-(
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க
:-)
Post a Comment