இனிதாய்த்தானடி இருந்தது
நம் உறவு
நெஞ்சுக்குள் இருந்த நட்பை
பிரசவித்து பேர் வைத்த பின்
அது ஊனமானதேன்
உன் பலம்
உன் பிடிவாதம்
உன் பலவீனமும்
உன் பிடிவாதம்
முதன் முதலாய்
நல்ல ஊழியக்காரியாய்
எனக்கு அறிமுகம்
இரண்டாவதாய்
நேர்மை
நேரம் தவறாமையும்
காலம் பார்க்காமையும்
எனக்குள் இருக்கும் நேர்மையும்
காலந்தவறாமையும்
உனக்குள் இருக்க
நமக்குள்
நட்பு
நடைபழக ஆரம்பித்தது
சிறு மண்டைக்குள்
அணுவாய் உன் ஞாபகங்கள்
எனை வியக்க வைத்த காலங்கள் அவை
என் உதவிக்காய்
உனைப்பரிந்துறைக்க வைத்தது
உன்
கண்ணியம்
என் உடலசைவறிந்து
உன் உணர்வுகள்
செய்யும் வித்தை பார்த்ததுண்டு
அதன் பின் தான்
உன் நிழல்கூட
அசையும் அசைவு கண்டேன்
என நெகிழ்ந்திருக்க
இன்று
அதே நட்பு தந்த உரிமையால்
உன் மேல் உரிமையாய் ஒரு சொல்
வீச
உன் பிடிவாதம்
அதைப்பிடித்துக்கொண்டது
திருப்பிக்கொடு
இனி உன் நட்பு இழக்க நான் தாயாரில்லை
நீ
நினைப்பாய்
ஏனெனில்
நீ
தேவதைகளின் ராட்சசி
சிறிது காலம்தான்
நம் நட்பு என்று
உன் நினைப்பும்
சிறிது காலமே இருக்கட்டும்
திருப்பிக்கொடு
இனி உன் நட்பு இழக்க நான் தாயாரில்லை
இன்னும்....
2 வகுத்தலும்:
//சிறிது காலம்தான்
நம் நட்பு என்று
உன் நினைப்பும்
சிறிது காலமே இருக்கட்டும்//
வரிகள் அனைத்தும் அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது..
ஆமாங்க நட்பு ஆழமா இருந்தா வார்த்தைகளும் ஆழமாத்தான் இருக்கும்..
Post a Comment