கண்ணில் செவ்வரி படற நீ பார்க்கையில்
உன்னை குளிரவைக்க இயலவில்லை
இரவுகள் உன்னால் சூடாயின
உன் மார்புக்குள் முகம் பதிக்க
நான் சூடாகினேன்
நீ குளிர்ந்தாய்
=========
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 7:32 AM 0 வகுத்தலும்
என்ன உறவு இது
காதலா?
காமமா?
இல்லை நால்வர்க்கான நட்பா?
உடல் பசி தீர்க்க
ஒன்றானோம்
காற்றுக்கு வழி விடாமல்
இன்னும் கற்பிழக்காமல்
நீ இழுக்க நான்
இப்போது நான் இழுக்க நீ
நட்பு நமக்கா ?
இல்லை நம் இதழ்களுக்கா?
நம் வேட்கை இன்னும் உள்ளே
ஆனால் இரண்டாக முடியாமல்.
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 7:31 AM 2 வகுத்தலும்
அஞ்சறைப்பெட்டி இதுவும் கவிதைன்னு...
உன்னிடமிருந்து எனக்கான அழைப்புகள்
நீ மனம் மகிழ மட்டுமல்ல
உன்னிடமிருந்து எனக்கான அழைப்புகள்
உன் துன்பத்திலும் வேண்டும்
உன்னிடமிருந்து எனக்கான அழைப்புகள்
உன் குழந்தையின் பிறந்த நாளுக்கும்
உன் இதயத்தின் சந்தோச துடிப்புக்கு மட்டும்
என் இதயமில்லை
உன் குழந்தையின் இதயதுடிப்பு மாறும் போதும்
இடம் வேண்டும் எனக்கு
உன் விழித்திருக்கும் இரவுகளும்
எனக்கானவைதான்
எது மாற்றியது உன்னை
என்னிலிருந்து பிய்த்துப்போடு
உனக்கு வேண்டாததை
உனக்காகாதது எனக்கும் வேண்டாம்
அம்பலத்தில் ஏற்ற வேண்டாம்
நம் உணர்வுகளை
உனக்கும் எனக்குமானவை
நமக்குள்ளே வைத்து
வெந்து போக நான் தயாரில்லை
காத்திருக்கிறேன்
எனக்கான உன் அழைப்பை எதிர்பார்த்து....
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 7:28 AM 0 வகுத்தலும்
கண்ணில் செவ்வரி படற நீ பார்க்கையில்
உன்னை குளிரவைக்க இயலவில்லை
இரவுகள் உன்னால் சூடாயின
உன் மார்புக்குள் முகம் பதிக்க
நான் சூடாகினேன்
நீ குளிர்ந்தாய்
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 8:04 AM 0 வகுத்தலும்